சீத்தாராம் யெச்சூரி மறைவு உண்மையா?

சீத்தாராம் யெச்சூரி மறைவு உண்மையா? புதுடில்லி: சுவாச தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.,12) காலமானார். அவருக்கு வயது 72., அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட லைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சில நாட்களுக்கு முன்பு சுவாச தொற்று பிரச்னையால் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்ந்த சீதாராம் யெச்சூரிக்கு உடல்நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இருந்தும் முன்னேற்றம் இல்லாததால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செயற்கை சுவாச உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள், பிற கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். கடந்து வந்த பாத...