தாமரை தண்டை பற்றி விரிவாக பார்ப்போம்.. Ø தாமரைத் தண்டை சாப்பிடலாமா ❓ தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும் . இது சத்து மிகுந்தது . மாவுச் சத்து புரதம் , கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன . நிறைய சத்துக்கள் , மருத்துவ குணங்கள் உள்ளன . எனவே இவற்றை சாப்பிடலாம் . Ø தாமரை தண்டில் உள்ள சத்துக்கள்: கொடி வகையைச் சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு , கால்சியம் , துத்தநாகம் , பொட்டாசியம் சத்துகளும் , வைட்டமின் பி , ஈ , கே உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன . Ø தாமரை தண்டின் முக்கிய அம்சங்கள்: கலோரி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் , எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது . மற்ற தாவரங்களைவிட வைட்டமின் சி சத்து மிக அதிகமாக இருப்பதால் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் . மிருதுவான சருமத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவும் . எலும்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும் , உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் தாமரைத்தண்டு...
Comments
Post a Comment