தாமரை தண்டை பற்றி விரிவாக பார்ப்போம்..
தாமரை தண்டை பற்றி விரிவாக பார்ப்போம்..
தாமரைத்
தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன. நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இவற்றை சாப்பிடலாம்.
Ø தாமரை தண்டில் உள்ள சத்துக்கள்:
கொடி வகையைச் சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு,
கால்சியம்,
துத்தநாகம்,
பொட்டாசியம்
சத்துகளும்,
வைட்டமின்
பி, ஈ, கே உள்ளிட்ட
ஊட்டச்சத்துகளும் உள்ளன.
கலோரி
மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.
மற்ற
தாவரங்களைவிட வைட்டமின் சி சத்து மிக
அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
மிருதுவான
சருமத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவும். எலும்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும்,
உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் தாமரைத்தண்டு உதவும்.
நீருக்கடியில்
வளர்வதால் இது குளிர்ச்சியானது
. தாமரைத்
தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது.
மேலும்
தாகமும் தணிகிறது. மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்தவாந்தியையும் தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.
Ø பெண்களுக்கு மிகவும் நல்லது:
பொதுவாக
குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது
என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.
குறிப்பாக
பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது .
ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது.
மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.
"This Video Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
Comments
Post a Comment