போதை ஒழிப்பு பற்றி விரிவான கட்டுரை, போதை பொருள் என்றால் என்ன? போதை ஒழிப்பு தினம், போதைப் பொருட்களின் வகைகள்.. போதைப்பொருள் பற்றிய முழக்கம்.
போதை ஒழிப்பு பற்றி விரிவான கட்டுரை.
போதை பொருள் என்றால் என்ன?
போதை ஏற்றிக்கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மக்களால் உட்கொள்ளப்படுகின்றன.
போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனிமனிதன், , சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த போதைப்பொருட்கள். போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.
போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் 50% திருமணமாகாத இளைஞர்களாவர் இதில் 50% இல் 69%
பாடசாலை மாணவர்கள்.
பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் பழகியக் கொண்ட பழக்கத்தை இன்று வரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்
இளம் வயதில் பழகிக் கொள்ளும் இத்தகைய போதைப் பழக்கங்கள் மெல்ல மெல்ல இவர்களை அடிமையாக்கி விடுகிறது.
போதைப் பொருட்களின் வகைகள்..
1. மதுபாணம்,
2. புகையிலை,
3. அபின்,
4. ஹெராயின்,
5. கஞ்சா,
6. பீடி,
7. சிகரெட்,
8. சுருட்டு,
9. குட்கா,
10. பான்மசாலா,
11. பெயிண்ட்,
12. மற்றும் மூக்குப்பொடி.
குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான இளம் வயதினரை கேட்டால் அதற்குக் கூறும் காரணங்கள்.
1. நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால், அல்லது
2. ஜாலி மூடில் இருந்ததால்
குடிப்பதாகவும்
3. பந்தாவுக்காக,
4. குடும்பத்தில் பிரச்சனை,
5. குடிப்பது ஓர் நாகரீகம்,
6. விபரமறியா காதல் தோல்வி,
7. மன அழுத்தம் .
போதைப்பொருள் பற்றிய
முழக்கம்.
1.புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும்,
2.குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு,
3.புகைத்தல் உங்களையும் எங்களையும் நேசிப்பவர்களையும்
பாதிக்கும்,
4.குடிபோதையில் குடும்ப சந்தோசத்தை இழக்காதீர்கள்,
5.போதைப்பொருள் பாவனை சட்ட ரீதியான குற்றமாகும்,
6.போதை நாம் காசு கொடுத்து வாங்கும் வேதனை,
7.போதையை ஒழிப்போம் பாதையை வளர்ப்போம்,
8.போதைப் பொருள் பாவைனையிலிருந்து நண்பர்களை
பாதுகாப்போம்,
9.போதையில் மோதி பாதையை மாற்றாதே,
10.உயிரை அழிக்கும் உடலை உருக்கும் கொடிய எதிரி போதை,
11.போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்,
12.போதை போதை அது சாவின் பாதை,
போதைப் பழக்கத்தினால் தனி ஒருவனுக்கு ஏற்படும் விளைவுகள்.
1. உடலில் நடுக்கம்
2. மனப்பதட்டம்
3. தூக்கமின்மை
4. தேவை இல்லாத கோபம்
5. அமைதியின்மை
6. எப்பொழுதும் அந்தப் போதைப் பொருளைப் பற்றியே
நினைத்துக்
கொண்டிருப்பர்
7. குடிப் பழக்கத்தினால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
8.மனதளவில் தளர்ச்சி அடைதல்,
9.பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல
பாதிப்புகளைச்
சந்திக்கக் கூடிய நிலை ஏற்படுதல்
10.மன அழுத்தம் ஏற்பட்டு உடலையும், மனதினையும்
பாதிக்கிறது,
11. நினைவாற்றலை
குறைக்கச் செய்கின்றது.
போதைப் பழக்கத்தினால் சமூகத்திற்க்கு ஏற்படும் விளைவுகள்.
- சுகாதார சீர்கேடுகள் ஏற்படுதல்
- வீதி விபத்துகளுக்கு காரணமாக விளங்குதல்
- எல்லா
குற்றச் செயல்களுக்கு முதற் காரணமாக விளங்குகிறது.
- கொள்ளை,
- கொலை,
- கற்பழிப்பு,
- வன்முறை
- பெரியவர்களை மதிப்பதில், இன்னும் பல.
உறுதிமொழி.
என்
உடல் நலத்திற்க்கு எது நல்லதோ, சரியானதோ, ஆரோக்கியமானதோ அதன்படி வாழவே நான் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.
நான்
எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பேன்.
புகையிலை
பொருட்களை “வேண்டாம்” என்பேன்
மதுவை
“வேண்டாம்” என்பேன்
போதை
பொருட்களை “வேண்டாம்” என்பேன்
என்
நண்பர்களும் இவற்றை “வேண்டாம்” என்று ஒதுக்கவும் நான் உதவியாக இருப்பேன்.
Pls Watch....
SPONSORSHIP
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
Comments
Post a Comment